வம்ச வரிசைகள் - பொது விளக்கம்
Jump to navigation
Jump to search
வெண்முரசில் பல அரச குலங்களின் வேர் ஒன்றாகவே இருக்கிறது. சூதர்களின் பாடல்களில் இந்த வேர்களும் கிளைகளும் விவரிக்கப்படுகின்றன.
'ஆதியில் விஷ்ணு இருந்தார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன் தோன்றினான்' என்றே பல வம்சவரிசைகள் தொடங்குகின்றன.
- சந்திர வம்சம்: "புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்” என்று சூதர்கள் சந்திர வம்சத்தின் குலவரிசையைப் பாடினர்.
- குரு வம்சம்: சந்திரகுலத்து பிருஹத்ஷத்ரன் இக்ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற ஹஸ்தியிலிருந்து குரு வம்சம் தொடக்கம்
- காசி வம்சம்: சந்திர வம்சத்து புரூரவஸ் வழி ஆயுஷ் பெற்ற மகன் ஆனேனஸ் முதல் காசி வம்சம் தனியாக விளக்கப்படுகிறது.
- சிபி வம்சம்: சந்திர வம்சத்து யயாதி மகன் அனுத்ருஹ்யன் முதல் சிபி வம்சம் தனியாக விளக்கப்படுகிறது.
- குரு வம்சம்: குருவிற்கு பிறகான நிரை குரு வம்சம் என்று அழைக்கப்படுகிறது.